தமிழகத்தில் பெண்களை பொருளாதார ரீதியாக ஊக்குவிக்கும் விதமாக இலவச மகளிர் பேருந்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க. அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து ஒரு கோடியே ஆறு லட்சத்து 50 ஆயிரம் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் திட்டத்தை, அண்ணா பிறந்தநாளான நேற்று (செப்டம்பர் 15) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அப்போது பேசிய முதல்வர், “இத்திட்டத்தின் மூலம் வருடந்தோறும் ரூ.12,000 வரை உரிமை தொகை பெற்று, பெண்களின் அங்கீகாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்துவதே நோக்கம்.” என கூறியுள்ளார். மேலும் இது போன்று பெண்களை பொருளாதார ரீதியாக உயர்த்தும் திட்டங்களை தி.மு.க. அரசு அறிவித்து வருவதால் தான் “பெண் விடுதலை உறுதியாகிறது” என பெண்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
கணவர் வேறொரு பெண்ணுடன் இருப்பது, மனைவியை கொடுமை படுத்துவது இல்லை., அதிரடி உத்தரவு!!!