அரியர் தேர்வுகள் ரத்திற்கு எதிர்ப்பு – AICTE கடிதம் வெளியானது, உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!!

0

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதிற்கு எதிராக AICTE கடிதம் எழுதி உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறி வந்த நிலையில், அந்த மின்னஞ்சல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் அரியர் தேர்வுகள் ரத்தினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

அரியர் தேர்வுகள் ரத்து?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இறுதிப்பருவ தேர்வுகளை தவிர்த்து பிற செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்து இருந்தது. இதனால் 7 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை வாழ்த்தி போஸ்டர், பேனர் எல்லாம் வைக்கப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய தொழில்நுட்ப கழகம் (AICTE) மின்னஞ்சல் அனுப்பியதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்து இருந்தார். ஆனால் அவ்வாறு மின்னஞ்சல் எதுவும் வரவில்லை எனவும் சூரப்பா தனது கருத்தை AICTE கூறியதாக தெரிவித்து வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்தார்.

anna university mk surappa
anna university vc mk surappa

தற்போது AICTE அனுப்பிய மின்னஞ்சல் கடிதம் வெளியாகி உள்ளது. அதில் அரியர் மாணவர்கள் தேர்வெழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். அரியர் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்தால் எந்த தொழில் நிறுவனமும், உயர்கல்வித்துறையும் ஏற்காது என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அரியர் தேர்ச்சிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தமிழக அரசு இன்ஜினியரிங், கலை, அறிவியல் மற்றும் MCA பட்டபடிப்புகளுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here