‘லடாக் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்’ – இந்திய, சீன வீரர்களிடையே துப்பாக்கிச் சண்டை!!

0
India China
India China

லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே முதல் முதலாக துப்பாக்கிச்சண்டை நடைபெற்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. எல்லை தாண்டி வந்து இந்திய ராணுவம் தான் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக சீன வெளியுறவுத்துறை குற்றம் சாட்டி உள்ளது.

எல்லையில் துப்பாக்கிச் சண்டை:

கடந்த ஜூன் மாதம் முதலே இந்திய – சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இது தொடர்பாக இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்கள், ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த பயனும் இல்லை. கடந்த 45 ஆண்டுகளாக இந்தியா, சீனா இடையே எவ்வித துப்பாக்கிச் சண்டைகளும் நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் லடாக்கில் எல்லைப் பகுதியை தாண்டி வந்து இந்திய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சீன ராணுவம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இது தொடர்பாக பேசிய சீன ராணுவ செய்தித் தொடர்பாளர், பாங் கோங் த்சோ ஏரியின் தெற்கு பகுதி மற்றும் ஷென்பவோ மலைபகுதிக்குள் இந்திய வீரர்கள் அத்துமீறி எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மீறி வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியாக தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு முயன்ற போதும், இந்திய ராணுவம் தாக்கியதாக அவர் கூறியுள்ளார். இதனால் தான் நாங்களும் பதிலடி கொடுக்க வேண்டியதாகி விட்டதாகவும், இந்திய ராணுவம் இத்தகைய செயல்களை நிறுத்திக் கொள்ளுமாறும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

India-china
India-china

இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவம் கூறுகையில், சீன வீரர்கள் தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மீறி வந்ததாகவும், அதனால் தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சண்டையில் யாருக்கும் காயம் ஏற்பட்டதா என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. இரு நாட்டு எல்லையில் அதிகரித்து வரும் பதற்றத்தை தணிக்க விரைந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு பிற நாடுகள் கூறி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here