செப். 21 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

0
Andhra CM
Andhra CM

ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் அனைத்தும் செப்டம்பர் 21ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

பள்ளிகள் திறப்பு:

செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும் ‘அன்லாக் 4.0’ க்கான வழிகாட்டுதல்களை ஆந்திர மாநில சுகாதார, மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள நிலையில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி செப்டம்பர் 21 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் பாடங்கள் எடுக்கப்பட உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

schools-mask

இருப்பினும், நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வசிக்கும் குழந்தைகள் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற்றிருந்தால் மட்டுமே தங்கள் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆந்திர மாநிலத்தில் பெரும்பாலான வகுப்புகளுக்கு, ஆன்லைன் வகுப்புகள் செப்டம்பர் மாத இறுதி வரை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகள் திறப்பு விதிகள்:

  • ஆந்திர மாநில அரசு வெளியிட்டு உள்ள ‘அன்லாக் 4.0’ வழிகாட்டுதல்கள் படி, ஆன்லைன் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள 50 சதவீத ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிகளுக்கு வந்து பணியாற்ற வேண்டும். இருப்பினும், செப்டம்பர் 21 முதல் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் மட்டுமே இந்த நடைமுறை அமலில் இருக்கும்.
  • கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே வசிக்கும் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களிடமிருந்து சந்தேகம் மற்றும் வழிகாட்டுதலுக்காக தங்கள் பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்ல எழுத்துப்பூர்வ ஒப்புதல் சமர்ப்பிக்க வேண்டும்.
  • மேலும் திறன் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனங்கள் செப்டம்பர் 21 முதல் செயல்பட அனுமதிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here