4 பொருள் போதும் மில்க் ஷேக், ஐஸ்கிரீம், கேக் ஈஸியா செய்யலாம் – எப்படி தெரியுமா??

0
oreo cake and ice creams
oreo cake and ice creams

குழந்தைகளுக்கு தற்போது உள்ள காலத்தில் வெளியில் வாங்கி தருவதை விட வீட்டிலேயே எளிய வகையில் ஸ்னாக்ஸ்களை செய்து தரலாம். வெளி கடைகளில் ஐஸ்கிரீம்கள் மற்றும் கேக்குகள் வாங்கி சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. எனவே எளிய முறையில் எப்படி கேக், ஐஸ்கிரீம், மில்க் ஷேக் போன்றவற்றை செய்யலாம் என பாக்கலாம்.

தேவையான பொருட்கள்

  • Oreo பிஸ்கட்
  • பால்
  • சர்க்கரை
  • பாதம், முந்திரி
  • டைரி மில்க்

Oreo கேக்

கேக் செய்ய Oreo பிஸ்கட்டை எடுத்து அதில் உள்ள கிரீம்களை தனியாக எடுத்துக்கொள்ளவும். அதன்பின் அந்த பிஸ்கட்டை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். பின்பு அதில் சிறிது பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும்.

ice-cream-cake-roll
ice-cream-cake-roll

அதன்பின் எடுத்து வைத்த கிரீம்களை சிறிது பால் சேர்த்து கலந்துகொள்ளவும். இப்பொழுது பிசைந்து வைத்த மாவை சப்பாத்தி கட்டையால் தேய்த்து அதனை சதுரவடிவமாக வெட்டிக்கொள்ளவும். அதன்மேல் கிரீமை தடவி மெதுவாக உருட்டவும். சிறிது சிறிதாக வெட்டி எடுத்தால் Oreo கேக் தயார்.

Oreo ஐஸ்கிரீம்

Oreo பிஸ்கட்டை பிரிக்காமல் பாக்கெட்டை நொறுக்கவும். இப்பொழுது கவரின் மேல் பாகத்தை சரிசமமாக வெட்டி எடுக்கவும். இப்பொழுது அந்த பாக்கெட்டில் பால் சேர்த்து கலந்து ஐஸ் குச்சியை உள்ளே வைத்து பிரிட்ஜில் வைக்கவும். கெட்டியானதும் எடுத்து கவரை பிரிக்கவும். அடுப்பில் வெந்நீர் வைத்து அதன் மேல் ஒரு சிறிய பௌலை வைத்து அதில் டைரி மில்க்கை போட்டு சிறிது பால் சேர்த்து உருகும்வரை கிளறவும். அதில் பாதம், முந்திரி பருப்பை சிறிதாக பொடித்து அதில் சேர்த்து நாம் செய்து வைத்த ஐஸ் கிரீம் மேல் தடவினால் Oreo ஐஸ்கிரீம் தயார்.

Oreo மில்க் ஷேக்

Oreo பிஸ்கட்டை மிக்ஸியில் அரைத்து அதில் பால் ஊற்றி நாம் ஏற்கனவே செய்து வைத்த ஐஸ்கிரீம் போன்றவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதனை பிரிட்ஜில் வைத்து எடுத்தால் Oreo மில்க் ஷேக் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here