நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது – சிபிசிஐடி போலீசார் அதிரடி!!

0

2019ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சம்பவத்தில், இடைத்தரகராக செயல்பட்ட இருவரில் ஒருவர் கைதான நிலையில், தலைமறைவாயிருந்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீட் தேர்வு வழக்கு:

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய சம்பவம் நடந்தது. இந்த முறைகேடான சம்பவத்தில் ஈடுபட்ட தேனி, சென்னை மற்றும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த, தனியார் மற்றும் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்த 16 மாணவர்களையும், அதற்கு உடந்தையாக இருந்த பெற்றோர்களையும் கைது செய்தனர் சிபிசிஐடி போலீசார். இதையடுத்து இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான, இடைத்தரகராக செயல்பட்ட ரஷீத் மற்றும் மோகன் ஆகியோர் தலைமறைவானார்கள்.

கவுதம் காம்பிர் திறந்த உணவகம் – 1 ரூபாய்க்கு உணவு!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதையடுத்து பெங்களூரில் வசித்து வந்த கேரளாவை சேர்ந்த ரஷீத் என்பவர், கடந்த மாதம் தேனி நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தார். இவர் மூன்று நாட்கள் சிபிசிஐடி காவலின் கீழ் வைத்து விசாரிக்கப்பட்டார். இந்நிலையில் தலைமறைவாகியிருந்த மற்ற இடைத்தரகரான மோகன் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த மோகனை சிபிசிஐடி போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்தே அதிரடியாக கைது செய்துள்ளனர். தற்போது கைதான மோகனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் முன்னதாக பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here