கவுதம் காம்பிர் திறந்த உணவகம் – 1 ரூபாய்க்கு உணவு!!

0

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் தற்போதைய பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் காம்பிர் ஓர் உணவகத்தை திறந்துள்ளார். அந்த உணவகத்தில் உணவுகளின் விலை ஏழை மக்களுக்கு ஏற்றபடி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

கவுதம் காம்பிர்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரராக திகழ்ந்தவர் தான் கவுதம் காம்பிர். கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு காம்பிர் அரசியலில் குதித்தார். பாஜக கட்சியில் சேர்ந்த காம்பிர் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு டெல்லி பகுதிகளில் வெற்றி பெற்று எம்.பி ஆனார். மேலும் மக்களுக்காக பல சேவைகளை செய்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் அதே தொகுதியில் காந்தி நகர் மார்க்கட்டில் முதன்முதலாக ஜன் ரசாய் உணவகத்தை திறந்தார். அதனை கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திறந்தார். தற்போது நியூ அசோக் நகர் பகுதியில் அதேபோல் உணவகத்தை திறந்துள்ளார். அந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 50 பேர் உண்ணலாம். மேலும் அந்த உணவகத்தில் ஏழைகளுக்கு ஏற்றவாறு ரூ.1க்கு உணவுகள் விற்கப்படுகிறது. இதனால் பலர் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர். தற்போது இதுகுறித்து பேசிய காம்பிர், நான் அரசியலுக்கு வந்தது நாடகம் நடத்தவோ, தர்ணா செய்யவோ அல்ல.

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினிக்கு இரண்டாவது திருமணம் – உலா வரும் தகவல்கள்!!

நாட்டில் ஓர் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த தான் வந்தேன். என்னிடம் உள்ளதை வைத்து அனைவருக்கும் உதவி செய்வேன், இது என்னுடன் முடியாமல் எனக்கு பின்பும் நடைபெற வேண்டும் என்று கூறினார். மேலும் இதுகுறித்து அம்மாநில பாஜக பொறுப்பாளர் பாண்டா கூறுகையில், பல மாநிலங்களில் மானிய விலையில் அரசுகள் உணவகங்களை திறந்துள்ளது. ஆனால் காம்பிர் செய்தது பாராட்டுக்குரிய விசயம் என்று கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here