விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினிக்கு இரண்டாவது திருமணம் – உலா வரும் தகவல்கள்!!

0

விஜய் டிவியின் நட்சத்திர பெண் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி. அனைவராலும் செல்லமாக டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினிக்கு தற்போது இரண்டாவது திருமணம் நடக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொகுப்பாளினிக்கு இரண்டாவது திருமணம்

பிரபலமான நட்சத்திர நிகழ்ச்சி தொகுப்பாளர் ப்ரியதர்ஷினியின் தங்கை தான் திவ்யதர்ஷினி என்கிற டிடி. சிறு வயதிலேயே விஜய் டிவிக்குள் நுழைந்த இவர் தற்போது விஜய் டிவியில் ஒரு தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரி பேராசிரியரான டிடி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அதிகமான நிகழ்ச்சிகளில் இவர் தான் தொகுப்பாளர்.

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!!

தனது துறுதுறுப்பான பேச்சாலும் சுறுசுறுப்பான செயலாலும் மக்கள் மனதில் நட்சத்திரமாக உயர்ந்து வந்தார். நடன நிகழ்ச்சிகள், பாடல் நிகழ்ச்சிகள், காபி வித் டிடி, அன்புடன் டிடி ஆகிய விஜய் டிவியின் கிட்டத்தட்ட எல்லா நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இது தவிர சில ஆல்பங்களிலும், ‘பவர் பாண்டி’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள மலையாள ஆல்பம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

டிடி கடந்த 2014 ம் ஆண்டு தனது நீண்ட கால நண்பரான, ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்தார் . பின்பு இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், 2017 ம் ஆண்டு இவரை விவாகரத்து செய்தார். அதன் பின்பு டிடி படங்களில் நடித்தும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். டிடி எப்போது மீண்டுமாக திருமணம் செய்துகொள்வார் என இவரது ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பிக் கொண்டு வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது கேரளாவை சேர்ந்த 42 வயதான தொழிலதிபரை டிடி இரண்டாவதாக மணக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து டிடியிடமிருந்து எந்த அதிகாரபூர்வமான தகவலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மறுமணம் செய்துகொள்வது உண்மையா, இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here