ஐசிசி டெஸ்ட் தரவரிசை – ரூட் முன்னேற்றம்! பின்தங்கிய விராட் கோஹ்லி!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ரூட் இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தினார். இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ரூட் முன்னேறியுள்ளார். மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பின்னுக்கு தள்ளப்பட்டார்.

ஐசிசி:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடத்த முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இதன் மூலம் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதல் இன்னிங்சில் இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தினார். முதல் இன்னிங்சில் இவரது தனிப்பட்ச ஸ்கோர் மட்டுமே 218 ரன்கள் ஆகும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இரண்டாவது இன்னிங்சில் இவர் 40 ரன்களை அடித்தார். முதல் போட்டியில் ரூட் 258 ரன்களை குவித்தார். மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 11 மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 72 என மொத்தமாக 82 ரன்கள் மட்டுமே அடித்தார். ரூட்டின் சிறப்பான ஆட்டத்தால் அவர் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முன்னேறியுள்ளார். தற்போது ஐசிசி, டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்து அணி கேப்டன் ரூட் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். முதல் இடத்தில் இருக்கும் வில்லியம்சனுக்கும் இவருக்கும் வெறும் 36 புள்ளிகள் தான் வித்தியாசம்.

முக்கிய வீரர்கள் பார்ம் அவுட் – கவலையில் சிஎஸ்கே அணி!!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 5வது இடத்திற்கு தள்ளப்பட்டார். மேலும் பந்து வீச்சு தரவரிசையில் ஆண்டர்சன் 3வது இடத்திற்கும் அஸ்வின் 7வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். 8வது இடத்தில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராஹ் உள்ளார். இந்த இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 13ம் தேதி சென்னை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here