Wednesday, May 15, 2024

அண்ணா பல்கலை., துணை வேந்தர் சூரப்பாவிற்கு மிரட்டல் கடிதம் – போலீசார் விசாரணை!!

Must Read

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவிற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதை அடுத்து போலீசார் கடிதம் அனுப்பியவரை கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்:

அண்ணா பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் சூரப்பா தன்னிச்சையாக அகில இந்திய கவுன்சிலுக்கு, பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று கடிதம் எழுதினார். இது அனைவர் மத்தியிலும் சர்ச்சை மற்றும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இதனால், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் என்று அனைவரும் தங்களது கண்டன கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கூடுதலாக, துணைவேந்தர் சூரப்பா பதிவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வந்தது. பல கட்சிகள் அவரை பலக்லைக்கழகம் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறி வந்தனர். இப்படியாக சர்ச்சையான சூழ்நிலை நீடித்து வருகின்ற சூழலில் “வீரப்பன்” என்ற பெயரில் அவருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

அந்த கடிதத்தில் துணை வேந்தர் சூரப்பாவினை துப்பாக்கி வைத்து சுட்டு கொல்லுவோம் என்று எழுதப்பட்டிருந்தது. இந்த மிரட்டல் கடிதம் அனைவர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து தற்போது விசாரித்து வருகின்றனர். சென்னையில் உள்ள கோட்டூர் போலீசார் இந்த வழக்கினை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -