தமிழகத்தில் முதுகலை, இளங்கலை பட்டபடிப்புகளுக்கு ஆன்லைன் தேர்வு – ஜூன் 14ல் தொடக்கம்!!

0
anna university
anna university

தமிழகத்தில் முதுகலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெறும் என்றும் அதற்கான தேதி குறித்தும் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

ஆன்லைன் தேர்வு:

கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அடைக்கப்பட்டது. மேலும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டும் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டும் வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த காரணத்தினால் இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்கல்வி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை மாணவர்கள் மத்தியில் மிக அதிகமான அளவில் காணப்பட்டது. எனவே மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அடைக்கப்பட்டது. இந்நிலையில் கடைசியாக நடந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ரேஷன் கடைகளில் முதல்வர் படம் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

இந்நிலையில் 2017ம் ஆண்டு ஒழுங்குமுறைப்படி அண்ணா பல்கலைக்கழக முதுநிலை மற்றும் இளங்கலை படப்பிடிப்பு மாணவர்களுக்கு வருகிற ஜூன் மாதம் 14ம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்தார். மேலும் மற்ற மாணாக்கர்களுக்கு வருகிற ஜூன் 21ம் தேதி தேர்வு தொடங்கும் என்றும் கடந்த முறை தேர்வு எழுதாதவர்கள், கட்டணம் செலுத்தாதவர்கள் வருகிற ஜூன் 3ம் தேதிக்கு முன்பு கட்டணம் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here