பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனுடன் விளையாடும் சன் டிவி நடிகை – வைரலாகும் புகைப்படம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பிளாஷ் பேக் சீன் வெளியான நிலையில் அதில் கடைக்குட்டி கண்ணனாக நடித்த சிறுவன் தற்போது தாலாட்டு சீரியலிலும் நடித்து வருகிறார். அந்த சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் உடன் அந்த குழந்தை விளையாடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. கதையை நாம் இதுவரையிலும் நினைத்து பார்த்திராத வகையில் வேறு கோணத்தில் கொண்டு போயுள்ளனர். பிளாஷ் பேக் சீன் எல்லாம் வரும் என்றும் யாருக்கும் தெரியாது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் மூர்த்தி இத்தனை கஷ்டப்பட்டு தான் தம்பிகளை வளர்த்துள்ளார் என்பது மிகவும் நெகிழ வைக்கிறது. மேலும் இந்த பிளாஷ் பேக் நிகழ்ச்சியில் அனைவர்க்கும் பிடித்தது குட்டி கண்ணனை தான். எவ்வளவு அழகாக கொழுக் மொழுக் என இருக்கிறாரே என்று பலரும் அவரை கண் வைக்க தான் செய்தனர்.

இந்நிலையில் அவர் தற்போது சன் டிவியில் தாலாட்டு என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் கிருஷ்ணா மற்றும் ஸ்ருதி ராஜ் நாயகன் நாயகியாக நடிக்கின்றனர். அவர்களுக்கு மகனாக நடிக்கிறார் குட்டி கண்ணன். தற்போது தன் ரீல் அம்மாவான ஸ்ருதி ராஜ் உடன் இணைந்து விளையாடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here