என்னமா.. இப்படி  பண்றீங்களேமா!! குதிரையின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட முழு கிராமத்திற்கே சீல்!!!

0

கர்நாடகாவில் பெலகாவி மாவட்டத்தில் மரதிமார் என்ற கிராமத்தில் குதிரையின் இறுதி சடங்கில்  நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று உள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, மாவட்ட நிர்வாகம் அந்த ஒட்டுமொத்த கிராமத்துக்கே சீல் வைத்துள்ளனர்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாட்டில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் நோய்ப்பரவலை தடுக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பல மாநிலங்களில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அம்மாநில அரசுகள் பொது முடக்கத்தை தற்போது அமல்படுத்தியுள்ளது.

 

இது போன்ற சூழலில் கர்நாடகாவில் ஊரடங்கு விதிகளை மீறி குதிரையின் இறுதி சடங்கில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆசிரமம் ஒன்றில் இருந்து கோவிலுக்கு வழங்கப்பட்ட குதிரை என்பதால் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு இறுதி சடங்கை நடத்தி உள்ளனர். அம்மாநிலத்தில் அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு விதிகளை பின்பற்றாமல் பொதுமக்கள் இவ்வாறு நடந்துகொண்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக  பரவியது.

இதையடுத்து அங்கு உள்ள 400 வீடுகளுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. அங்கு வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here