இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அண்ணா பல்கலை வெளியீடு!!

0
anna university
anna university

கொரோனா ஊரடங்கு உத்தரவிற்கு மத்தியில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 7ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ள நிலையில் பிற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அதன் கட்டுப்பாட்டில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.

ஆன்லைன் வகுப்புகள்:

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே கொரோனா அச்சம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வந்தது. இடையிடையே ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக பள்ளி, கல்லூரிகளை அந்தந்த மாநிலங்களில் நிலவும் சூழலை பொறுத்து திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை என கூறி வரும் மாநில அரசு, கல்லூரிகளை திறக்க முடிவு செய்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி முதுகலை 2ம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 2ம் தேதி முதலும், இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 7ம் தேதி முதலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன் கட்டுப்பாட்டில் உள்ள 450 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், இறுதியாண்டு தவிர்த்து பிற மாணவர்களுக்கு வரும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் டிசம்பரில் பள்ளிகள் திறப்பு??

அதுமட்டுமின்றி இறுதியாண்டு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் வரை நேரடியாக கல்லூரிகளுக்கு வரலாம் எனவும், நாள் ஒன்றுக்கு பிற மாணவர்களுக்கு 5 வேளை மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here