நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து!!

0

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ட்விட்டரில் #HAPPY BIRTHDAY RAJINIKANTH ட்ரென்டிங்கில் உள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் மோடி ட்விட்டரில் ‘நீண்ட நாள் நீடித்த நலமுடன் வாழ்க’ என வாழ்த்து அனுப்பியுள்ளார்.

ரஜினிகாந்த் பிறந்தநாள்

சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பெங்களூரில் கொண்டாடப் போவதாக அறிவித்த நிலையில் திடீரென தமிழகம் திரும்பி இங்கு தனது 70வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறார். அரசியலில் கட்சி தொடங்கவுள்ள நிலையில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் அதற்கு முன்னோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர் நடிகைகளும் ரசிகர்களும் என பலதரப்பட்டவர்கள் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவிக்கிறாரகள். பிரபல இணையதளமான ட்விட்டரில் #HAPPY BIRTHDAY RAJINIKANTH என்ற ஹேஸ்டேக் ட்ரென்டிங்கில் உள்ளது. பலரும் அதை ட்விட் செய்து வருகின்றனர்.

அவரது ரசிகர்கள் அவருக்காக கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்துவருகிறார்கள். மேலும், அன்னதானங்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். நம் பாரத பிரதமர் மோடி அவர்களும் ரஜினிகாந்த் அவர்களுக்கு வலது தெரிவித்துள்ளார்.

14 மில்லியனை தொட்ட சமந்தா ஃபாலோவர்ஸ் – இணையத்தை கலக்கும் புகைப்படம்!!

அன்புள்ள ரஜினிகாந்த் ஜி, என ஆரம்பித்துள்ள மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள ரஜினிகாந்த் ஜி, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட நல்ல ஆரோக்கியமான வாழ்வை பெற வாழ்த்துவதாக தெரிவித்தார். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நிலையில் அவரது இந்த பிறந்தநாளை ரசிகர்களும், தொண்டர்களும் மிகுந்த இரட்டிப்பான மகிழ்ச்சியுடனும், ஆர்வரத்துடனும் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here