வீக் எண்டு ஸ்பெஷல் – “வெஜிடபிள் ஒன் பாட் பிரியாணி” ரெசிபி!!

0

வாரக்கடைசி நாள் சனி, ஞாயிற்று கிழமை வந்தாச்சு. வாரக்கடைசி வந்தாலே எதாவது ஸ்பெஷலான சாப்பாடு வேணும்னு நம்ம வீட்ல இருக்குற எல்லாரும் கேப்பாங்க. நம்மளோ வாரம் முழுவதும் வேலை தானே பாக்குறோம், வாரக்கடைசிலயாவது கொஞ்சம் ப்ரீயா இருக்கலாம்னு நினைப்போம்.

அதுனால எதாவது சிம்பிளா சமைச்சா போதும்னு நினைப்போம். இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு நம்ம ” ஒன் பாட் வெஜிடபிள் பிரியாணி” தாங்க. இதுக்கான வேலை சிம்பிள், டேஸ்ட் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். இந்த ” ஒன் பாட் வெஜிடபிள் பிரியாணி” எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

சீரகசம்பா அரிசி – 1 kg
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
மல்லித்தழை – 1 கை அளவு
புதினா – 1 கை அளவு
கேரட் – 50 gm
பீன்ஸ் – 50 gm
உருளை கிழங்கு – 1
மீல் மேக்கர் – 50 gm
பட்டர் பீன்ஸ் – 50 gm
மல்லித்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 2டீ ஸ்பூன்
பிரியாணி இலை – 2
உப்பு – தேவையான அளவு
தயிர் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிரியாணி இலை, மல்லித்தழை, புதினா,பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர், வெங்காயம், தக்காளி, இஞ்சி,பூண்டு விழுது இவற்றை தனித்தனியே சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும். இப்பொழுது மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா இவற்றை சேர்க்க வேண்டும். பின்னர் காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்பொழுது தயிர் சேர்த்து கிளற வேண்டும். இப்பொழுது அரிசியின் அளவிற்கு இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொத்தி வந்ததும் அரிசி மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். இப்பொழுது குக்கரை மூடி 2 விசில் விட வேண்டும். விசில் இறங்கியதும் 10 நிமிடங்கள் கழித்து திறந்து நெய் ஊற்றி கிளறி விட வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த்தின் 70வது பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து!!

அவ்வளவு தாங்க நம்ம “ஒன் பாட் வெஜிடபிள் பிரியாணி” ரெடி. இதனுடன் வெங்காய பச்சடி வைத்து பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும். இவ்வளவு சுலபமான இந்த பிரியாணியை இந்த வாரக்கடைசியில் செஞ்சு உங்க வீட்ல இருக்குற எல்லாரையும் அசத்துங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here