பள்ளிகளை திறக்க இதுவே சரியான நேரம் – WHO தலைமை விஞ்ஞானி கருத்து!!

0

தனியார் தொலைக்காட்சியும் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனமும் இணைந்து ‘துளிர்க்கும் நம்பிக்கை’ என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. அதில் பல முக்கிய தலைவர்கள் பங்கேற்ற நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்??

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்டது. பின் தற்போது வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வீட்டிலேயே குழந்தைகள் இருப்பதால் தாய்மார்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுதொடர்பாக, தனியார் தொலைக்காட்சியும் ஃபேஸ்புக் நிறுவனமும் இணைந்து ‘துளிர்க்கும் நம்பிக்கை’ என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது. நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் ஒருங்கிணைப்பில் நடந்த அந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோருடன் தியாகராயர் குழும தலைவர் கருமுத்துக்கண்ணன், ZOHO சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு, KISSFLOW சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம், பிஜிபி குழுமத் தலைவர் பழனி ஜி.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், “கொரோனா தொற்று குறைந்து வருவதால், பள்ளிகள் திறப்பதற்கு இதுவே சரியான நேரம். பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம். ஆன்லைன் வகுப்புகள் எங்கு முடியுமோ அங்கு அதை செய்யலாம். உலகம் முழுவதும் 2021ஆம் ஆண்டுக்குள் 20 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் 70வது பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து!!

மேலும் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,”“புதுச்சேரியில் ஜனவரியில் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளை இந்த மாதமே திறக்கிறோம். இந்த கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கு கொடுப்பதாக கூறியுள்ளது. அவ்வாறு கொடுக்கவில்லை என்றால், அதற்காக காலம் தாழ்த்தாமல் மாநில அரசே அதற்கான நிதியை உருவாக்கி கண்டிப்பாக மக்களுக்கு கொடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here