நீண்ட கால தோழியை மணந்தார் கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி – குவியும் வாழ்த்துக்கள்!!

0

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி தனது நீண்ட கால தோழியை திருமணம் செய்து கொண்டார். நடிகர் விஜயின் ரசிகரான இவர் சில நாட்களுக்கு முன் தான் அவரை சந்தித்தார்.

ஐபிஎல் தொடர்:

கிரிக்கெட் என்றால் இந்திய மக்களிடையே ஒரு ஈர்ப்பு இருக்கும். அப்படி தனது சிறு வயது முதலே நன்றாக கிரிக்கெட் விளையாடி பழகியுள்ளார், வருண். நடுத்தர குடும்பத்தினை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு சரியாக வாய்ப்புகள் கிரிக்கெட் உலகில் கிடைக்கவில்லை. படித்து முடித்ததும் வேலை கிடைக்காமல் இருந்தபோது தான் அவரது கவனம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டில் திரும்பியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதனால் முழு நேர கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார். இவர் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக தான் இருந்து வந்துள்ளார். ஆனால், இந்த பிரிவுகளில் போட்டிகள் அதிகமாக இருந்த காரணத்தால் அவர் சுழற்பந்து வீச்சிற்காக பயிற்சி மேற்கொண்டார். அதில் முழுமையாக கவனம் செலுத்தி அபாரமாக பந்து வீசினார். ஐபிஎல் தொடரில் இவரது பந்து வீச்சு காரணமாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் தனது காயம் காரணமாக ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்க முடியாமல் போனது.

நடிகர் ரஜினிகாந்த்தின் 70வது பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து!!

தற்போது தனது நீண்ட கால தோழியினை திருமணம் செய்துள்ளார் வருண். இவர்களது திருமணம் மிகவும் எளிமையாக தான் நடைபெற்றது. சில உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கு கொண்டனர். சமூக வலைத்தளங்களில் இவரது திருமண புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here