டெல்லியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் – கூடுதல் ராணுவப்படைகள் குவிப்பு!!

0

டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்சா டெல்லியின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். ஆலோசனையில் டெல்லியில் கூடுதல் ராணுவப்படைகளை குவிப்பதற்கான முடிவு செய்யப்பட்டது.

அமித்சா அவசர ஆலோசனை

டெல்லியில் நேற்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளின் பேரணி நடந்தது. அந்த பேரணியில் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் நடந்த மோதலில் கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது. மேலும் அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தினால் டெல்லியில் சில இடங்களில் இணையசேவை துண்டிக்கப்பட்டது.

‘இந்திய அணியில் எனக்கு எப்பொழுதும் நிரந்திர இடம் இருக்கும்’ – ரஹானே பேட்டி!!

தொடர்ந்து டெல்லியின் தற்போதைய நிலவரத்தை குறித்தும் டெல்லியின் பாதுகாப்பை குறித்தும் தெரிந்து கொள்ள உயர் அதிகாரிகளை அழைத்து தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை மந்திரி அமித்சா. இந்த கூட்டத்தில் டெல்லியின் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டது. மேலும் 4,500 துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போதிலும் இன்னும் கூடுதலாக 2000 ராணுவப்படையினரை ஏற்பாடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் உசார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில முதல் மந்திரி அமரீந்தர் சிங் மற்றும் ஹரியானா மாநில டிஜிபி மனோஜ் யாதவ் ஆகியோர் அந்தந்த மாநிலங்களில் உசார் நிலையை பிறப்பித்துள்ளனர். நேற்று நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். ரயிலை தவறவிட்ட ரயில் பயணிகளுக்கு அவர்கள் கட்டணத்தை திருப்பி தருவதற்கு ரயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. ‘சுவராஜ் இந்தியா’ அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் இந்த வன்முறைக்கு பொறுப்பெடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here