‘சீனாவை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்’ – சர்வதேச நிதியம் கணிப்பு!!

0

இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் கண்டிப்பாக வளர்ச்சி அடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனை சர்வதேச நிதியம் கணித்துள்ளது.

இந்தியா பொருளாதாரம்:

கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் தொழில் எதுவும் நடைபெறவில்லை. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் சரிவை கண்டது. மேலும் மும்பை பங்குசந்தையும் சரிவை கண்டது. தற்போது கொரோனாவின் வேகம் குறைந்து வருவதால் அனைத்து பகுதிகளிலும் தொழில்கள் தற்போது தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு வந்தது. மேலும் மும்பை பங்குசந்தையும் யாரும் எதிர்பாராத அளவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. இதனால் இந்தியாவின் பொருளாதாரமும் சற்று உயர தொடங்கியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இரவு உடையில் மார்க்கமாக போஸ் கொடுத்த அனிகா சுரேந்தர் – திக்குமுக்காடிய இணையதளம்!!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி:

தற்போது உலக நாடுகளில் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் ஓர் கணிப்பு தகவலை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், இந்த ஆண்டில் இந்தியா பொருளாதாரத்தில் அபார வளர்ச்சி அடைய உள்ளது. இந்த ஆண்டில் சுமார் 11.5 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை இந்தியா காணவுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் அடுத்தபடியாக சீனா 8.1 சதவீதமும், ஸ்பெயின் 5.9 சதவீதமும் மற்றும் பிரான்ஸ் 5.5 சதவீதமும் வளர்ச்சி அடையும் என்று கணித்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இவர்களது கணிப்பில் இந்தியா மட்டுமே இரட்டை இலக்கு சதவீதத்தை பெற்றுள்ளது என்பதே. இதன் மூலம் வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற சிறப்பை இந்தியா மீண்டும் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here