நீண்ட நாள் காதலரை கரம் பிடித்த நடிகை நட்சத்திரா – வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்!!

0

தொலைக்காட்சி தொடரின் நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான நடிகை நட்சத்திரா தனது நீண்ட நாள் காதலரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். அதற்கான நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நக்ஷத்திரா திருமணம்

கொரோனா ஊரடங்கில் திரையுலகில் ஏகப்பட்ட திருமணங்கள் நடந்து முடிந்துள்ளது. தற்போது சில நாட்களாக திரைத்துறையின் நடிகர் நடிகைகள் தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் பிரபல தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் நட்சத்திரா. நிகழ்ச்சி தொகுப்பாளரான நட்சத்திரா ஏராளமான குறும்படங்களிலும் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

சவரனுக்கு ரூ.120 வரை குறைந்த தங்கத்தின் விலை – ஏக குஷியில் நகைப்பிரியர்கள்!!

இந்நிலையில் நட்சத்திரா தனது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரின் பள்ளிக்கால நண்பரான நீண்ட நாள் காதலர் ராகவ் என்பவரை கரம் பிடிக்க போவதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தன் வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here