சவரனுக்கு ரூ.120 வரை குறைந்த தங்கத்தின் விலை – ஏக குஷியில் நகைப்பிரியர்கள்!!

0

தற்போது தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை சரிவை சந்தித்து வருகிறது. இதனால் நகை வாங்குவதற்காக காத்திருக்கும் நகை விரும்பிகள் குஷி அடைந்துள்ளனர்.

தங்கம்:

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது. இதனால் மக்கள் நகை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வந்தனர். மேலும் சுப நிகழ்ச்சிகளை நடத்த காத்திருந்தவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். தற்போது கடந்த பண்டிகை காலத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிரடியாக குறைய தொடங்கியது. இதனால் நகை விரும்பிகள் மற்றும் சுப நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுவே தங்கம் வாங்குவதற்காக உரிய காலம் என்றே சொல்லலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ – மாஸாக வெளியான பர்ஸ்ட் லுக் வீடியோ!!

சென்னையில் இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. தற்போது 1 சவரன் ஆபரணத்தங்கம் ரூ. 36,968 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிராம் ஆபரணத்தங்கதின் விலை ரூ.15 குறைந்து, 1 கிராம் ரூ.4,621 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல் தூயதங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. 1 சவரன் தூயதங்கம் ரூ. 120 குறைந்து, 1 சவரன் ரூ.40,040 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி 1 கிராம் வெள்ளி ரூ. 70.80 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிலோ கட்டி வெள்ளி ரூ.70,800 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here