சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ – மாஸாக வெளியான பர்ஸ்ட் லுக் வீடியோ!!

0

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன். தற்போது அவரது புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தனது புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன்:

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் அபார வளர்ச்சி அடைந்தவர் தான் நம்ம சிவகார்த்திகேயன். இவரது படம் அனைத்தும் ரசிகர்களை கவரும் வண்ணத்தில் தான் இருக்கும். மேலும் இவரது படத்தில் காமெடி பற்றி கேக்கவே வேணாம் அந்த அளவிற்கு நகைச்சுவ சிறப்பாக இருக்கும். தற்போது இவர் டாக்டர் மற்றும் அயலான் படங்களில் பிசியாகி வருகிறார். இந்த படங்களின் வேலைகள் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. மேலும் இந்த இரு படங்களும் விரைவில் வெளியாகும் என்று இவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் புது படம் பற்றிய அப்டேட் இன்று வெளியாகும் என்று நேற்று ஓர் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கம் மூலம் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்திற்கு ‘டான்’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை லைகா நிறுவனம் சுபாஷ் கரண் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் சேர்ந்து தயாரிக்க உள்ளனர்.

‘இந்த வீட்டில் எல்லாத்தையும் மாத்தி காட்றேன்’ – ஜீவாவிடம் சவால் விடும் மீனாவின் அத்தை!!

வழக்கம் போல் இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். தற்போது வெளியான பர்ஸ்ட் லுக்கில் கல்லூரிகள் சார்ந்த காட்சிகளே இடம் பெற்றுள்ளன. எனவே இந்த படம் கல்லூரி சம்மந்தப்பட்ட ஜாலியான கதைக்களத்தை கொண்டு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டான் படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here