‘இந்திய அணியில் எனக்கு எப்பொழுதும் நிரந்திர இடம் இருக்கும்’ – ரஹானே பேட்டி!!

0

இந்தியா அணியின் டெஸ்ட் போட்டிக்கான துணை கேப்டன் ரஹானே தற்போது ஓர் பேட்டியளித்துள்ளார். அதில் இந்தியா அணியில் தனக்கு எப்போதும் இடம் இருக்கும் என்றும் அதை பற்றிய பயம் எனக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

ரஹானே:

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றி அசத்தியது இந்தியா அணி. இந்த தொடரில் கோஹ்லி இல்லாத நிலையில் ரஹானே டெஸ்ட் அணியை வழிநடத்தினார். அந்த தொடரில் ரஹானேவின் கேப்டன்சி மிகவும் சிறப்பாக இருந்தது. மேலும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் ரஹானேவிற்கு பாராட்டுக்கள் குவியும் வண்ணமாக இருந்து வருகிறது. அந்த தொடரில் இந்தியா அணியின் செயல்பாடும் மிக சிறப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இது குறித்து இந்தியா டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே பிடிஐ நிறுவனத்திற்கு ஓர் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,’இந்தியா டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோஹ்லி தொடர்வார். மேலும் அவர் இல்லாத நிலையில் நான் இந்தியா அணியை வழிநடத்த உள்ளேன். மேலும் கேப்டனாக இருப்பது பெரிய விஷயம் அல்ல. கேப்டனாக எப்படி செயல்படுகிறோம் என்பதே பெரிய விஷயம். எனக்கும் விராட் கோஹ்லிக்கும் இடையே சுமுகமான உறவே நீடித்து வருகிறது. மேலும் நாங்கள் இருவரும் வெளிமண்ணில் மற்றும் இந்தியா மண்ணில் டெஸ்ட் தொடரை அதிகமாகவே விளையாடியுள்ளோம்.

நகைக்கடை தொழிலதிபர் மனைவி, மகன் கொடூர கொலை – என்கவுண்டரில் கொல்லப்பட்ட குற்றவாளி!!

மேலும் அணிக்கு தேவையான சமயங்களில் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். அதுமட்டுமல்லாமல் களத்தில் வைத்து நாங்கள் இருவரும் போட்டியின் தன்மையை குறித்தும் பேசியுள்ளோம். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் எனது பேட்டிங் குறித்து விராட் கோஹ்லி பாராட்டியுள்ளார். மேலும் இந்தியா அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் வெற்றி பெற்றது மிக சிறந்த விஷயம். அந்த வெற்றி அணியின் அனைத்து வீரர்களுக்கும் உரிமம். மேலும் இந்தியா அணியில் எனது இடம் குறித்து நான் ஒருபோதும் கவலை பட்டது அல்ல. எனக்கு இந்தியா அணியில் எப்போதும் இடம் இருக்கும் என்று துணை கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here