Monday, April 29, 2024

மும்மொழி கொள்கையை ஏற்று இந்தியை வளர்க்க வேண்டும் – அமித் ஷா ட்வீட்!!

Must Read

தேசிய இந்தி தினத்தை ஒட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மக்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியுடன் தேசிய மொழியான இந்தியையும் வளர்க்க வேண்டும்’ என்று என்று தனது வாழ்த்துச் செய்திகளை பதிவிட்டு உள்ளார்.

தேசிய இந்தி தினம்:

கடந்த 1949 ஆம் ஆண்டு இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக தேசிய நிர்ணய சபை முடிவு செய்தது. இது கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14 ஆம் தேதி “தேசிய இந்தி தினம்” கொண்டாடப்படுகிறது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் தனது வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துள்ளார்

இந்தியை வளர்க்க வேண்டும்:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில் “ஒரு நாட்டின் எல்லை கோடுகளை வைத்தோ, கனிம வளங்களை வைத்தோ அந்த நாட்டின் அடையாளம் நிர்ணயிக்கப்படுவதில்லை. அந்த நாட்டில் மக்களை பேசும் மொழியினை வைத்து தான் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகின்றன, அது இந்தியாவின் தேச ஒற்றுமையும், நமது சகோதரத்துவத்தையும் காட்டுகிறது.”

நீட் எதிர்ப்பு மாஸ்க்குகளுடன் அணிவகுத்த எம்எல்ஏக்கள் – கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம்!!

“இப்படி பல மொழிகள் பேசப்பட்டாலும் இந்தி தான் அனைத்து மக்களையும் இணைக்கிறது. நம் நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தி தான் நம் அனைவரயும் இணைகின்ற பாலமாக இருக்கிறது. மோடி அரசு அறிவித்துள்ள மும்மொழி கொள்கையை அனைத்து மக்களுக்கு பின்பற்றி ஹிந்தியினை வளர்க்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

அதே போல் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்தி தினத்தில் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தி மொழியினை வளர்த்த அனைத்து மொழியியல் அறிஞர்களுக்கும் எனது நன்றிகள்.” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

செப் தாமு vs வெங்கட் பட்.., இவர்களுக்கு இடையே இருக்கும் சீக்ரட்.., முழு ஆதரவும் இவருக்கு தான்!!

விஜய் டிவியில் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் குக் வித் கோமாளி சீசன் 5 இனிதே தொடங்கிய நிலையில், முக்கிய பிரபலங்கள் சிலர் கலந்து கொள்ளாதது பலரையும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -