‘மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டீங்களே மேடம்’ – அமலா பாலை வச்சு செய்த நெட்டிசன்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலா பால். தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து கொண்டிருக்கும் அமலா பால் இன்ஸ்டா பக்கத்தில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பார். தற்ப்போது வித்தியாசமான கெட்டப்பில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

அமலா பால்

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அமலா பால். இதில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அமலா. பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இந்த படத்தில் இருப்பதால் பல எதிர்ப்புகள் தோன்றினர். முதல் படமே அமலா பாலிற்கு இப்படி அமைந்து போனது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த படத்தை தடை செய்ய பலரும் இந்த படத்தின் இயக்குனர் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் எதற்கும் காதில் வாங்கிக்கொள்ளாது தனது அடுத்த முயற்சியை ஆரம்பித்தார் அமலா பால். அதன் வெற்றியாக தான் அவருக்கு ‘மைனா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

படமும் மாஸ் ஹிட் அடித்தது. ஆரம்ப படத்திலேயே தனது முழு நடிப்பு திறனையும் வெளிப்படுத்தினார் அமலா பால். ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார் அமலா. பல வாய்ப்புகள் அவருக்கு குவிந்தது. குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தார் அமலா பால்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு – தேர்தல் காரணமா??

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழிகளில் கலக்கி வந்தார். ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார் அமலா. இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து வந்த அமலா பால் சில வருடங்களுக்கு முன்பாக அவரை திருமணமும் செய்து கொண்டார்.

திருமணமான சில நாட்களிலேயே திருமண வாழ்க்கை கசிந்ததால் இருவருக்கும் விவாகரத்தும் ஏற்பட்டது. அதன் பிறகு விஜய் ஒரு டாக்டரை திருமணம் செய்துகொண்டார். தற்போது அந்தாலஜி திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

வயதான நடிகருடன் ஜோடி சேரும் அமலாபாலை பலரும் கிண்டல் செய்ய தான் செய்தனர். மேலும் தொடர்ந்து தனது புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக்கி வருகிறார். தற்போது மண்டையில் ஒரு கொண்டையுடன் அமலா வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here