கமல்ஹாசன், ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு – தேர்தல் காரணமா??

0

மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். அரசியல் குறித்தும் விவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஜினியை சந்தித்த கமல்

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், தற்போது நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் நடிகர் கமல்ஹாசன், தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இடையில் அவரது காலில் ஏற்பட்ட காயத்தின் நிமித்தமாக கடந்த மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் தற்போது குணமடைந்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

“வாத்தி கம்மிங் ஒத்து” பாடல் – கலக்கலாக நடனமாடிய இந்திய வீரர்கள்!!

தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கமல்ஹாசன் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ரஜினிகாந்தை அவரது போயஸ் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மாரடைப்பு காரணமாக ஹைதராபாத்தில் சிகிச்சை மேற்கொண்ட ரஜினி, வீடு திரும்பியதைத் தொடர்ந்து அவரை சந்திப்பேன் என் கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி இன்று ரஜினியை சந்தித்த கமல்ஹாசன் அவரது உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார். மேலும் அரசியல் குறித்து இருவரும் பேசிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக, நண்பர் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பேன் என கமல்ஹாசன் கூறியது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here