“வாத்தி கம்மிங் ஒத்து” பாடல் – கலக்கலாக நடனமாடிய இந்திய வீரர்கள்!!

0

மாஸ்டர் திரைப்படத்தில் வரும் பிரபலமான பாடல் தான் வாத்தி கம்மிங். இந்த பாடலுக்கு தற்போது இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் நடனமாடி உள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வாத்தி கம்மிங்:

கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடல் அனைவராலும் கவரப்பட்டது. மேலும் இதுகுறித்து ஏற்கனவே இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் புகழ்ந்து கூறியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்த போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறும். மேலும் இந்த போட்டியில் ஹர்டிக் பாண்டிய இணைய உள்ளார். தற்போது அந்த போட்டிக்காக வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டி வரும் 24ம் தேதி தொடங்குகிறது.

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

பயிற்சியின் போது இந்திய அணியின் ஹர்டிக் பாண்டியா, அஸ்வின் மற்றும் குல்தீப் ஆகியோர் வாத்தி கம்மிங் பாட்டை போட்டு ஓர் குத்தாட்டம் ஆடியுள்ளனர். அந்த பாட்டில் விஜய் ஆடுவது போல் இவர்களும் ஆடியுள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here