திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து – மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!!

0

திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவின் கடன்கள் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மு.க ஸ்டாலின் பேச்சு

முதல் மூன்று கட்ட தேர்தல் பரப்புரையை முடித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது நான்காம் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பின் கீழ் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின். சட்டமன்ற தேர்தலை ஒட்டி பரப்புரையில் ஈடுபட்டு வரும் ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவிக்குழுக்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சதித்திட்டதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் இடத்தை வளைத்துப்போடும் ஜனார்த்தனன் – மூர்த்தி குடும்பத்தின் நிலை??

தற்போது மதுரை மற்றும் கோவை பகுதிகளில் நான்காம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ஸ்டாலின். தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ‘திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கியுள்ள 5 சவரன் வரையுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார். முன்னதாக திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன், விவசாயக்கடன் ஆகியவை ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here