தமிழக சட்டமன்ற தேர்தல் – திமுக விருப்ப மனுவிற்கு கால அவகாசம் நீடிப்பு!!

0

நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சியின் வேட்பாளராக நிற்க விரும்புபவர்கள் தங்களது விருப்ப மனுவை தற்போது பதிவு செய்து வருகின்றனர். தற்போது இதற்கான கால அவகாசம் கூட்டப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். அதேபோல் தேர்தல் அதிகாரிகளும் மிக மும்மரமாக பணிகளை செய்து வருகின்றனர். மேலும் கடந்த 17ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெறவுள்ள தேர்தலில் திமுக கட்சியின் வேட்பாளராக யார் போட்டியிட விரும்புகிறார்களோ அவர்கள் விருப்ப மனுவை தாக்கல் செய்யலாம் என்று அறிவித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுகுறித்து தற்போது கட்சியின் பொதுச்செயலாளர் துறை முருகன் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, வேட்பாளராக போட்டியிட விரும்புவோர்கள் 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை விருப்ப மனுவை சமர்ப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் நண்பர்கள் மற்றும் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று தற்போது 28ம் தேதி மாலை 5 மணி வரை இதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து – மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!!

மேலும் அறிவாலயத்தில் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் பொது தொகுதியில் போட்டியிடுவோர் ரூ.25 ஆயிரமும் மற்றும் மகளிர் தனி தொகுதியில் போட்டி இடுவோர்கள் ரூ.15 ஆயிரமும் கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கடைசி தேதிக்கு முன்னதாகவே விருப்ப மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here