‘பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்’ – நிர்மலா சீதாராமன் கருத்து!!

2
The Minister of State for Commerce & Industry (Independent Charge), Smt. Nirmala Sitharaman addressing a press conference, in New Delhi on October 14, 2016.

தற்போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் கவலையில் உள்ளனர். தற்போது இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை:

கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் இந்தியாவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 ஐ தாண்டி புதிய வரலாற்று சாதனையை படைத்தது. தற்போது இந்த விலை உயர்வினால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்து வருகின்றனர். மேலும் சில மாநிலங்களில் வாட் வரியை குறைத்து வருகின்றனர். இருந்தும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்து தான் வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பெட்ரோல் மற்றும் டீசலின் விலையின் அதிகரிப்பு எனக்கு மிகவும் வருத்தமாக தான் உள்ளது. நான் நிதி அமைச்சர் மட்டும் தான், என்னால் இதில் ஒன்றும் பண்ண முடியாது. இதன் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தான் மாற்றி அமைத்து வருகின்றனர்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு – தேர்தல் காரணமா??

எனவே பெட்ரோல் மற்றும் டீசலின் மீதான வரியை குறைப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசு கலந்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் இதன் விலையை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வருவதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

2 COMMENTS

  1. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டாம் கூட்டம்தான் வேண்டும் இன்னும் டீசல் ரேட் அதிகமாக வேண்டும் கேஸ் சிலிண்டர் குறைய வேண்டும் முக்கியமாக மானிய சிலிண்டர் முக்கியமாக பிழைக்க வேண்டும் வீட்டு உபயோக சிலிண்டர் மட்டும் குறைக்க வேண்டும் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மோடி அவர்கள் டீசல் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டாம் ரூபாய் 600 ரூபாய்க்கு டீசல் பெட்ரோல் விலை ஏற்றம் பரவாயில்லை ஆனால் ஆசிரியர்களை மட்டும் குறைக்க வேண்டும் லாரி உரிமையாளர்கள் அனைவரும் இந்த ஒரு நற்செய்தி நல்லபடியாக தெரிவிக்க வேண்டும்

    • பெட்ரோல் டீசல் விலை குறைக்க வேண்டாம் பொதுமக்களுக்கு ரொம்பவும் இடையூறாக இருக்கும் சிறு வாகனம் டூ வீலர் ஃபோர் வீலர் சிக்ஸ் வீலர் அனைத்துக்கும் வாகனங்கள் குறைக்க வேண்டும் அதற்காக டீசல் விலை லிட்டர் 500 ரூபாய் கொண்டு சென்று மத்திய சர்க்கார் மத்திய அரசாங்கம் இதை நடவடிக்கை எடுக்க வேண்டும் அதாவது ஐயா மோடி அவர்கள் 15 வருஷம் சொன்னார் 15 வருஷம் இல்லை இன்னும் இருபத்தஞ்சு வருஷத்துக்கு பழைய வாகனங்கள் 25 வருஷங்கள் வரை வைத்துக் கொள்ளலாம் ஆனால் டீசல் பெட்ரோல் விலை மாற்றம் செய்ய வேண்டாம் ரூபாய் 500 ரூபாய்க்கு குறைக்காமல் ஏற்றிக் கொண்டே போகவேண்டும் அப்பத்தான் பொது மக்கள் நிம்மதியாக ரோட்டில் நடக்க முடியும் வாழ முடியும் நமது இந்தியாவை காப்பாற்ற இந்த வருடம் ஐயா அவர்கள் நடவடிக்கை எடுத்தாலும் சரி அடுத்த இலக்கு அவர்களை வெற்றி செய்து வந்தால் எந்த ஒரு அரசாங்கம் வந்தாலும் பரவாயில்லை ஆனால் டீசல் பெட்ரோல் விலை குறைக்க வேண்டாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here