ரஷ்யாவில் திரியும் பச்சை மற்றும் நீல நிற நாய்கள் – மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!!

0

ரஷ்யாவில் கடந்த சில நாட்களாகவே அந்த பகுதியில் உள்ள நாய்கள் பச்சை மற்றும் நீல நிறத்தில் உள்ளதாம். தற்போது அதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளது.

ரஷ்யா:

உலகில் தினமும் பல அதிசயமான விஷயங்கள் நடந்து வருகிறது. தற்போது அதே போல் ஒன்று தான் ரஸ்சியாவில் நடந்துள்ளது. ரஷ்யாவில் கடந்த 11ம் தேதி முதல் 7 தெரு நாய்கள் நீல நிறத்தில் திரிந்ததாம். அதன் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவி வைரலானது. நிஷினி நொவ்ஹோரோட் என்னும் பகுதியில் அதிகமாக தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. அங்கு ஓர் கண்ணாடி தொழிற்சாலையும் இயங்கி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் நீல நிற சாயம் தான் இதற்கு காரணம் என்று தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து நாய்களை பரிசோதித்த கால் நடை மருத்துவர் கூறியதாவது, நாய்களின் உடல் நலத்திற்கு ஒன்றும் இல்லை. அவை நன்றாக உணவு உண்கிறது. மேலும் அது தோலில் உள்ளது சாயம் தான் என்று தெரிவித்தனர்.

பேரனை வைத்து இயக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் – முட்டுக்கட்டை போடும் விஜய்!!

மேலும் இதேபோல் போடாஸ்க் என்னும் பகுதியில் சில நாய்கள் பச்சை நிறத்தில் திரிந்ததாம். இதற்கும் அங்குள்ள பெயிண்ட் சேமிப்பு கிடங்கு தான் கரணம் என்றும் அங்குள்ள நாய்கள் அனைத்தும் நலமாக உள்ளது என்றும் கால் நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அந்த புகைப்படம் அனைத்தும் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here