உலகில் அதிகரிக்கும் இதய நோயாளிகள் – சந்தைக்கு வரும் செயற்கை இதயம்!!

0

தற்போது உலகில் அதிகளவில் இதய நோயால் உயிர் இழப்பவர்களை கட்டுப்படுத்தும் வகையில் செயற்கை இதயம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த இதயம் விரைவில் சந்தைக்கு வரும் என்று கூறியுள்ளனர்.

செயற்கை இதயம்:

தற்போது உலகில் ஆண்டுக்கு ஒன்றரை கோடிக்கும் அதிகமானோர் இதய நோய் பாதிப்பால் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். மேலும் இதய குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதனை மருத்துவர்கள் சிகிச்சை மூலம் நீக்கி வருகின்றனர். மேலும் சிலருக்கு இதயம் முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு இதய மாற்று சிகிச்சை தான் நடைபெறும். அதற்கு மூளைச்சாவு மூலம் யாராவது இறந்திருந்தால் மட்டும் தான் அவர்களிடம் இருந்து மாற்று இதயம் பெற முடியும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதயத்திற்காக காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். இதனை தடுக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கார்மெட் என்னும் மருத்துவர் ஓர் கண்டுபிடிப்பை செய்துள்ளார். அவர் தனது 20 ஆண்டு ஆராய்ச்சிக்கு பின்பு ஓர் செயற்கையான இதயத்தை கண்டுபிடித்துள்ளார். இந்த இதயம் சிலிகானால் உருவாக்கப்பட்டது.

விரைவில் சந்தையில்:

இது மனிதர்களின் இதயத்தை போல் தான் இருக்கும். மேலும் இதன் மொத்த எடை 390 கிராம் மட்டுமே. இதய மாற்று சிகிச்சைக்காக ஒருவருக்கு மாற்று இதயம் பொருத்தப்படும் வரை இந்த இதயம் அவரது உடம்பில் செயல்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் நோயாளிகளின் உயிரை இந்த செயற்கை இதயம் காப்பாற்றும் என்று கூறுகிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

‘பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்’ – நிர்மலா சீதாராமன் கருத்து!!

மேலும் இதுகுறித்து தமிழக மருத்துவர்கள் கூறியதாவது, இந்த இதயம் இந்தியாவிற்கு வருவதற்கே நீண்ட காலம் ஆகும். மேலும் இங்கு வந்தாலும் அதனை பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் அளவில் தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். தற்போது இந்த செயற்கை இதயம் விரைவில் சந்தைக்கு வரும் என்று எதிரிபார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here