வித்தியாசமான கெட்அப்பில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோ – குவியும் லைக்ஸ்!!

0

இளம் நடிகையாக தற்போது சினிமா துறையில் வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

கீர்த்தி சுரேஷ்

தென்னிந்தியாவில் தற்போது பிரபலமாக இருந்து வரும் நடிகை தான் கீர்த்தி சுரேஷ். இவர் முன்னாள் நடிகர் சுரேஷின் மகள் ஆவார். திரை பின்னணி இருந்ததால் அவரது திரை பயணம் எளிதாக அமைந்து விடவில்லை. அவர் இன்று முன்னணி நடிகையாக இருக்க கடினமாக உழைத்துள்ளார் என்று கூட சொல்லலாம்.

Image result for keerthy suresh in mahanati

தமிழில் முதன் முதலாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் “ரஜினிமுருகன்” திரைப்படத்தில் தான் நடித்தார். அதில் தனது குறும்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருப்பார்.

Image result for keerthy suresh

அதற்கு அடுத்து சில முன்னணி நடிகர்களுடன் சில திரைப்படங்களில் நடித்திருப்பார். தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து தனக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

பேரனை வைத்து இயக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் – முட்டுக்கட்டை போடும் விஜய்!!

அவர் நடித்த அனைத்து படங்களுக்கும் மகுடம் வைத்தாற் போல் அவர் நடித்த “மகாநதி” திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு அழைத்து சென்றது. தற்போது பல முன்னணி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது உடல் எடையினை குறைத்து முற்றிலும் மாறுபட்டு காட்சியளித்தார். அந்த தோற்றத்தினை ரசிகர்கள் அனைவரும் வெறுத்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் அதனை அவரிடம் தெரிவித்ததும் ரசிகர்களின் ஆதங்கத்தை புரிந்து கொண்ட கீர்த்தி மீண்டும் தனது உடல் எடையினை பழையபடி மாற்றிக்கொண்டார். தற்போது புதிய புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here