நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ – மீண்டும் பாரத் பந்த்??

0
Bank Strike

2020-2021ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் நாளான அன்று நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் வங்கி சேவை பாதிக்கப்பட கூடும். மேலும் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாவார்கள். ஏற்கனவே ஜனவரி 8ம் தேதி நாடு முழுவதும் பாரத் பந்த் என்ற பெயரில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

எதற்காக ஸ்டிரைக்??

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் அமைப்பு இந்திய வங்கிகள் அமைப்புடன் சம்பள உயர்வு தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததன் காரணமாக இந்த இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த 15 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தால் போராட்டத்தைக் கைவிட வாய்ப்புகள் உள்ளது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர இங்கே கிளிக் செய்யவும்

Image result for youtube logo

யூடூப் சேனலில் தொடர இங்கே கிளிக் செய்யவும்

என்னென்ன கோரிக்கைகள்??

  1. 12.25 சதவீத சம்பள உயர்வு
  2. வங்கி இணைக்கப்படும் போது அளிக்கப்படும் சிறப்புக் கொடுப்பனவு தொகையை அடிப்படை சம்பளத்தில் இணைப்பு
  3. அனைத்துப் பொதுத்துறை வங்கிகளுக்கும் கட்டாயம் 5 நாள் வேலைநாள்
Image result for telegram logo

டெலிகிராம் சேனலில் சேர இங்கே கிளிக் செய்யவும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெறவுள்ளது. ஜனவரி 31ஆம் தேதியன்று பொருளாதார ஆய்வு அறிக்கையும், பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2வது முறையாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ள நிலையில் அதே நாட்களில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here