குடியுரிமை சட்டத் திருத்தத்தை (CAA) திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை – அமித் ஷா திட்டவட்டம்

0
Amit Shah

பிரதமர் மோடி தலைமையிலான அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை எவ்வளவு போராட்டம் நடைபெற்றாலும் திரும்பப் பெறாது என அமித் ஷா குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) ஆதரவாக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர்,

“எதிர்ப்பால் வளர்க்கப்பட்ட நாங்கள் எதிர்ப்பைப் பற்றி கவலைப்படுவதில்லை”. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது அங்கு ஹிந்துக்கள், புத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை உள்ளடக்கிய சிறுபான்மையினர் மொத்தம் 23 சதவீதம் பேர் இருந்தனர். ஆனால், இன்றைக்கு இந்த எண்ணிக்கை வெறும் 3 சதவீதமாகக் குறைந்துள்ளது. அவர்களின் நிலை என்ன?? அவர்கள் ஆடம்பர வாழ்க்கையை விட்டுவிட்டு குடிசையில் வாழ்ந்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் மிகப் பெரிய புத்தர் சிலை சிதைக்கப்பட்டுள்ளது. அங்கு தலித்துகள் துன்புறுத்தப்படுகின்றனர். தலித்துகளின் பாதுகாவலராகக் குறிப்பிடும் மாயாவதி இதுபோன்ற விவகாரங்களில் ஏன் மௌனம் காக்கிறார்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா – முழு விளக்கம்

தலித் வங்காள குடும்பத்துக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மம்தா பானர்ஜி சிஏஏவை எதிர்க்கிறார். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் போராடும் விதத்தைப் பார்த்தால், அவர்களுக்கு இம்ரான் கானுடன் (பாகிஸ்தான் பிரதமர்) தொடர்பு இருப்பதுபோல் தெரிகிறது. ஏனென்றால், அவர்களுடைய எதிர்ப்பு தேச நலனைச் சார்ந்ததாக இல்லை என்றார்.

ஜனவரி 10 முதல் குடியுரிமை சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது – மத்திய அரசு

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here