ஜனவரி 10 முதல் குடியுரிமை சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது – மத்திய அரசு

1
மத்திய அரசு

மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி, போராட்டங்கள் நடைபெற்றுவரும் வேளையில் குடியுரிமை சட்டத் திருத்தமானது ஜனவரி 10 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் அமல்படுத்தப்பட்டுவிட்டதாக மத்திய அரசின் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ள முஸ்லிம் அல்லாத பிற மதத்தினா் இந்தியக் குடியுரிமை பெறலாம். இது ஜனவரி 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது” என தெரிவித்துள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்தின் நோக்கம்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி கடந்த 2014, டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய அந்நாடுகளைச் சோ்ந்த சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை அளிப்பதே இந்த திருத்தச் சட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள அண்டை நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே மத்திய அரசின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது முஸ்லீம்களை குறிவைத்து தாக்கும் மத்திய அரசின் நடவடிக்கை எனவும் பலதரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தம் – முழு விளக்கம்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here