மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் – அடுத்த ரவுண்டுக்கு தேர்வான தல அஜித்!!

0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று வருகிறார். இதில் தற்போது அஜித் அடுத்த ரவுண்டுக்கு தேர்வாகியுள்ளார்.

தல அஜித்:

வலிமை படத்தில் நடித்து முடித்து விட்டு தற்போது ஓய்வு நேரத்தை பல வகையில் செலவு செய்து வருகிறார் தல அஜித். இவரது வலிமை படத்தின் படப்பிடிப்பு கடந்த 15ம் தேதியே முடிந்து விட்டது. தற்போது வலிமை படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் தயாரிப்பதில் பிசியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் தல அஜித் தற்போது சைக்கிளிங், துப்பாக்கி சுடுதல் என தனது நேரங்களை மிகவும் பயனுள்ளதாக மாற்றி வருகிறார்.

மேலும் அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பெரிய அளவில் வைரலாகி வைரலாகி வருகிறது. தற்போது அஜித் அதிக அளவில் துப்பாக்கி சுடுதலில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அதற்காக போட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். தற்போது மாநில அளவில் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

தொடையழகை காட்டி அமலா பால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் – திணறிப்போன ரசிகர்கள்!!

இந்த போட்டியில் கலந்து கொண்ட தல அஜித் மிக சிறப்பாக செயல்பட்டார். தற்போது இந்த போட்டியில் தல அஜித் அடுத்த ரவுண்டுக்கு தேர்வாகியுள்ளார். இந்த தகவலினால் தல ரசிகர்கள் படு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஏற்கனவே அஜித் ஏரோஸ்பெஸிங், ரேஸிங் போன்றவற்றில் வல்லவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது அஜித் துப்பாக்கி சுடுதலிலும் சிறந்தவராக திகழ்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here