மாநிலங்களவை எம்.பிகளான முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ராஜினாமா – அதிமுகவில் அடுத்தடுத்து பரபரப்பு!!

0

கடந்த அதிமுக ஆட்சியில் மாநிலங்களவை எம்.பியாக முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது அவர்கள் மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

மாநிலங்களவை எம்பி:

தமிழகத்தில் 159 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுடன் கைப்பற்றி 125 தொகுதிகளை தனியாக கைப்பற்றியுள்ளது திமுக கட்சி. நடந்து முடிந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மிக அதிக அளவிலான வாக்குகளை பெற்று திமுக கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. மேலும் தற்போது தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் பதவியையும் மற்றும் மற்ற திமுகவினர் அமைச்சர் பதவியையும் ஏற்றுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் நாளை சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. மேலும் பல சிக்கல்களுக்கு பின்பு எதிர்க்கட்சி தலைவரை அதிமுக கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதன்படி தமிழகத்தின் புதிய எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது கடந்த அதிமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட மாநிலங்களவை எம்பி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ராஜினாமா செய்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வு – கல்வியமைச்சர் அதிரடி!!

இவர்கள் இருவரும் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். ஒருவர் மாநிலங்களை உறுப்பினர் அல்லது சட்டப்பேரவை உறுப்பினர் என இந்த இரண்டில் ஒரு பதவியில் மட்டுமே நீட்டிக்க முடியும். இதன் காரணமாக தற்போது முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் எம்பி பதவியில் இருந்து விலகி எம்.எல்.ஏ பதவியில் நீட்டிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here