கொரோனவால் 18 பேராசிரியர்கள் மரணம் – உத்தரப்பிரதேசத்தில் நடந்த சோகம்!!

0

உத்தர பிரதேச மாநிலத்தில் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் பணி புரிந்த 18 பேராசிரியர்கள் கொரோனா நோய்த்தொற்றினால் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று:

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிக பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மேலும் தற்போது அனைத்து மாநிலங்களிலும் பல வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இருந்தும் கொரோனா நோய்த்தொற்றின் வீரியம் தொடர்ந்து கட்டுக்குள் வராமல் மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. தற்போது அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் பணி புரிந்த 18 பேராசிரியர்கள் கடந்த 20 நாட்களில் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அரசு பேருந்தை தொடர்ந்து தனியார் பேருந்துகளிலும் பெண்களுக்கு சலுகை – தனியார் போக்குவரத்து அதிரடி!!

இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் இந்திய மருத்துவ ஆய்வகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன்படி பல்கலைக்கழகத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் படி தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவலினால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here