‘விக்ரம் 60’ திரைப்படத்தில் இணையும் வாணி போஜன் – குவியும் வாழ்த்துக்கள்!!

0

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தில் நடிகை வாணி போஜன் இணைந்துள்ளார். இந்த தகவலால் வாணி போஜன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

விக்ரம் படத்தில் இணையும் வாணி போஜன்

நடிகர் விக்ரம் நடிக்கும் 60ஆவது படத்தை இயக்கவுள்ளார் பல வெற்றிப்படங்களின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தை இன்னும் ஸ்பெஷலாக்கும் விதமாக, விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இப்படத்தில் நடிக்க உள்ளார். முன்னதாக அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படத்தில் விக்ரமுடன் நடிகர் பாபி சிம்ஹா ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது கூடுதல் தகவல். இந்நிலையில் பெயரிடப்படாத இத்திரைப்படத்தில் விக்ரமுடன் நடிகை வாணி போஜன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை வாணி போஜன் சில சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். ‘ஓ மை கடவுளே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் வாணி போஜன்.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் தகவல்!!

தன் நடிப்பு திறமையால் பல ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்து வரும் வாணி போஜன் நடிப்பில் தமிழில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகவுள்ளன. முன்னதாக வாணி போஜன் நடித்து வரும் ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘தாழ்திற’, ‘கேசினோ’ ஆகிய திரைப்படங்கள் தயாரிப்பில் உள்ளன. இந்நிலையில் நடிகர் விக்ரம் நடிக்கும் 60ஆவது படத்தில் இணைந்துள்ளார் நடிகை வாணி போஜன். படக்குழுவினர் அறிவித்துள்ள இந்த தகவலால் வாணி போஜன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here