தமிழக சட்டமன்ற தேர்தல் – திருச்சியில் 9 தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம்!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்கு 9 கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தற்போது தேர்தல் ஆணையம் முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும் பல அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. இவர்களை போல் பறக்கும் படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தேர்தல் நடவடிக்கையாக திருச்சி மாவட்ட ஆட்சியர் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி தற்போது அவர் திருச்சி மாவட்டத்திற்கு தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்கு பொதுப்பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன்படி அவர் அந்த மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு கண்காணிப்பாளராகளை நியமித்துள்ளார். மணப்பாறை மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளுக்கு பொது பார்வையாளராக ராம்பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி தெற்கு தொகுதிக்கு பார்வையாளராக எஸ்.என் கிரிஷ் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி பார்வையாளராக என்.பி.எஸ். ராஜ்புட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – முக்கிய அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்!!

மேலும் லால்குடி மற்றும் திரும்வெறும்பூர் தொகுதிகளுக்கு முகமது தயாப் பெல் நியமிக்கப்பட்டுள்ளார். துறையூர் தனி தொகுதிக்கு சுரேந்திரராமும் மற்றும் மண்ணச்சநல்லூர், முசிறி ஆகிய தொகுதிகளுக்கு கிருஷ்ணகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் தேர்தல் குறித்து புகார் ஏதேனும் தெரிவிக்க வேண்டும் என்றால் இவர்களின் அலுவலகங்களில் நேரில் சந்தித்தும் அல்லது தொலைபேசி மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here