தமிழக சட்டமன்ற தேர்தல் – முக்கிய அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்!!

0

தமிழக அரசியல் களம் தேர்தல் நடைபெறும் நாள் நெருங்க நெருங்க மிகவும் சூடுபிடித்து வருகின்றது. தற்போது திமுக வேட்பாளர்களை கனகச்சிதமாக இறக்கி உள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். அனைவரும் இந்த தேர்தலுக்காக தங்களது வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் தேர்தல்

வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. காரணம், இந்த தேர்தலில் வெற்றி பெரும் கட்சி தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் சிம்மாசனத்தை அலங்கரிக்கும். இதற்காக என்று அனைத்து கட்சிகளும் தங்களது வியூகங்ககளை வகுத்து வருகின்றது. அதே போல் எந்தெந்த தொகுதிகளில் யாரை நிறுத்த வேண்டும் என்றும் கட்சி சார்பில் முடிவு எடுக்கப்பட்டு வருகின்றது.

‘எச் 1 பி விசாவில் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்திற்கு தடை – ஜோ பைடன் அதிரடி!!

Stalin promises allowance for home makers; Kamal Haasan accuses DMK of stealing MNM's ideas - Elections News

இதில் மிகவும் தீவிரமாக இருப்பது திமுக கட்சி தான். குறிப்பாக அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் மக்களை கவரும் கவர்ச்சிகரமான திட்டங்கள் மற்றும் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதனை அடுத்து அதிமுக கட்சியின் முக்கியமான தலைவராக கருதப்படும் பன்னீர்செல்வம் போட்டியிட இருக்கும் தொகுதிகளில் தான் ஸ்டாலின் வியூகம் வகுத்து அந்த கட்சியின் முக்கிய வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Send Krishna' to save Chennai: Paneerselvam to Naidu - DTNext.in

பன்னீர்செல்வத்திற்கு எதிராக திமுக கட்சி சார்பில் தங்கத்தமிழ்செல்வம் போட்டியிட உள்ளார். இதேபோல் கோவை தொண்டாமுத்தூரில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணியை எதிர்த்து கார்த்திகேய சேனாதிபதி நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் இந்த தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த போட்டிகளுக்கான விடை வரும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here