ஆவணங்கள் இன்றி நெடுஞ்சாலையில் எடுத்து சென்ற தங்க நகைகள் – போலீசார் அதிரடி நடவடிக்கை!!

0

சேலம் மற்றும் சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புடைய தங்க நகைகள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தங்க நகைகள் பறிமுதல்

சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசல் அருகே பெரியேரி என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த வாகனத்தை சோதனை செய்த போது, அதில் 36 கோடி ரூபாய் மதிப்புடைய தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேகமடைந்த போலீசார் அந்த வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விசாரணையில் தனியார் நகைக்கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக தங்க ஆபரணங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது என்று தெரியவந்தது. தொடர்ந்து சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு பொது மையத்தில் ஆபரணங்கள் பாதுகாக்கப்பட்டு, அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள நகைக்கடைகளுக்கு தங்க ஆபரணங்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 செய்முறை தேர்வு அடுத்த மாதத்தில் தொடக்கம் – தேர்வுத்துறை அறிவிப்பு!!

இருந்தாலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் அந்த நகைகளை எடுத்து சென்றதால் அந்த ஆபரணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக தேர்தல் விதிமுறையின் படி 50,000 ரூபாய்க்கு மேலாக பொருளோ, பணமோ எடுத்து சென்றால் அதற்குரிய ஆவணங்கள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here