பிளஸ் 2 செய்முறை தேர்வு அடுத்த மாதத்தில் தொடக்கம் – தேர்வுத்துறை அறிவிப்பு!!

0

தமிழகத்தில் அடுத்த மாதம் பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறை தேர்வு தொடங்குகிறது என்று தேர்வு துறை அறிவித்துள்ளது. மேலும் அதற்கான தேர்வு தேதியையும் தேர்வு துறை அறிவித்துள்ளது.

பிளஸ் 2:

தமிழகத்தில் வருகிற மே மாதம் 3ம் தேதியுடன் பிளஸ் 2 வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் தொடங்கப்படவுள்ளது. இதற்காக தேர்வு எழுத போகும் மாணவர்கள் அனைவரும் மிக தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். மேலும் மாணவர்களின் நலன் கருதி பாடத்திட்டங்களுக்கும் குறைக்கப்பட்டது. இந்நிலையில் வருகிற ஏப்ரல் மாதம் 16ம் தேதி பிளஸ் 2 வகுப்பிற்கான செய்முறை தேர்வுகள் தொடங்குகிறது என்று தேர்வு துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து ஓர் அறிக்கையையும் தேர்வு துறை வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் தெரிவித்ததாவது, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 23ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி செய்முறை தேர்வுக்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். மேலும் செய்முறைத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் பதிவெண் விவரங்களை முதன்மை கண்காணிப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள் பாடவாரியாக நிரப்பி அனுப்ப வேண்டும். செய்முறை தேர்வில் மாணவர்களுக்கு வழங்கும் மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலில் பதிவு செய்ய வேண்டும்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

ஒவ்வொரு நாளும் பாடவாரியாக மதிப்பெண் பட்டியல்களை தனித்தனி உறையில் அரசு முத்திரையிட்டு தங்களுடைய சொந்த பொறுப்பில் முதன்மை கண்காணிப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மேலும் செய்முறை தேர்வுகள் முடிந்ததும் அதற்கான ஆவணங்களை ஏப்ரல் 24ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதன்பின்னர், அந்த மதிப்பெண்களை முதன்மை கல்வி அலுவலர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் 20 முதல் 28ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் வருகிற மே மாதம் 6ம் தேதிக்குள் அனைத்து மாவட்ட அரசு தேர்வு உதவி இயக்குனரிடம் மதிப்பெண் பட்டியல் கட்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here