‘எச் 1 பி விசாவில் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்திற்கு தடை – ஜோ பைடன் அதிரடி!!

0

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டிரம்ப் அறிவித்த எச் 1 பி விசாவிற்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்தார் அதனை தற்போது புதிய அதிபர் பைடன் அதிரடியாக தடை செய்துள்ளார்.

எச் 1பி:

கடந்த கொரோனா காலத்தில் அமெரிக்க நாட்டில் பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்களது வேலையினை இழந்தனர். இதனால் பலரது வாழ்வாதாரமே கேள்விக்குறியானது. இந்நிலையில் இதனை சரி செய்வதற்கு அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டிரம்ப் எச் 1பி விசாவிற்கு குறைந்த பட்ச ஊதிய நிர்ணயத்தை அமல்படுத்தினார். இந்த திட்டம் வருகிற மே மாதம் 14ம் தேதியுடன் நடைமுறைக்கு வரவுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது நடைமுறைக்கு வந்தால் அமெரிக்கர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று டிரம்ப் கூறினார். ஆனால் இது நடைமுறைக்கு வந்தால் இந்திய மற்றும் சீன பயனாளர்களை அமெரிக்காவில் பணியில் நியமிப்பது சற்று சிக்கலாகி விடும். எனவே இதனை அமெரிக்காவில் வாழும் பிற நாட்டவர்கள் எதிர்த்தனர்.

இந்தியாவில் மேலும் 23,285 பேருக்கு கொரோனா உறுதி – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

இந்நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் தற்போது இதற்கு ஓர் முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து தொழிலாளர் நலத்துறைக்கு டிரம்பின் உத்தரவை நிறுத்திவைக்குமாறு உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து மக்களிடம் கட்டாய முறையில் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும் என்று ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஊதியத்தில் வரம்பு விதித்தால் திறமை வாய்ந்தவர்களை அமெரிக்காவில் பணியில் அமர்த்த முடியாது என்று ஜோ பைடேன் அரசு விளக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here