பழைய கொழுக் மொழுக் உடலமைப்புக்கு மாறிய ஸ்னேகா – வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழ் திரையுலகின் முன்னனி நடிகையாக இருந்த நடிகை ஸ்னேகாவின் இரண்டாவது பிரசவத்துக்கு பின்பு உடல் எடை அதிகரித்திருந்தது. உடல் பயிற்சியின் மூலம் எடையை குறைந்திருந்த நடிகை ஸ்னேகா மீண்டுமாக பருமனாகியுள்ளார்.

நடிகை ஸ்னேகா

மும்பையை சேர்ந்த நடிகையான ஸ்னேகா 2000களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர். மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த நடிகை ஸ்னேகா நடிகர் மாதவனுடன் ‘விரும்புகிறேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அதிகமான திரைப்படங்களை நடித்துள்ளார் ஸ்னேகா. ‘ஆனந்தம்’, ‘புன்னகை தேசம்’, ‘உன்னை நினைத்து’, ‘பம்மல் கே சம்பந்தம்’, ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’, ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘வசீகரா’, ‘ஆட்டோக்ராப்’, ‘புதுப்பேட்டை’, ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ உள்ளிட்ட ஏகப்பட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் ஸ்நேகா.

புன்னகை அரசி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை ஸ்னேகா தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட அனைத்து கதாநாயகர்களுடன் ஜோடி போட்டுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை ஸ்னேகா.

புதுச்சேரியில் கவிழ்ந்த காங்கிரஸ் ஆட்சி – முதல்வர் நாராயணசாமி ராஜினாமா!!

இந்நிலையில் மீண்டுமாக கர்ப்பமான ஸ்னேகாவுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தை வயிற்றிலிருக்கும் போதே நடிகர் தனுசுடன் ‘பட்டாசு’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை ஸ்னேகா. இந்த படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கதாப்பாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

குழந்தை பெற்ற பின் உடல் எடை அதிகரித்த ஸ்னேகா உடற்பயிற்சியின் மூலம் எடையை குறைத்தார். தற்போது நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள ஸ்னேகா கிரிக்கெட் மட்டையை வைத்து விளையாடியுள்ளார். மீண்டுமாக பருமனான உடலுடன் ஸ்னேகா காணப்படும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here