புதுச்சேரியில் கவிழ்ந்த ஆளும் கட்சி – காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய திட்டம்!!

0

புதுச்சேரியில் மாநில முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மெஜாரிட்டியை இழந்ததை அடுத்து, எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்க கோரினால் ஆளும் கட்சியில் உள்ள எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதற்கு தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்எல்ஏக்கள் ராஜினாமா

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் அங்குள்ள அரசியல் கட்சிகளிடையே குழப்பங்கள் உருவாகியுள்ளது. புதுச்சேரியில் ஆளும் கட்சியான முதல்வர் நாராயணசாமி தலைமையின் கீழான எம்எல்ஏக்கள் பலர் தங்களது பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து புதுச்சேரி அரசவையில் ஆளும் கட்சி தனது மெஜாரிட்டியை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த வாக்கெடுப்பில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆளும் அரசு தனது மெஜாரிட்டியை இழந்தது. புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துள்ளது. இதையடுத்து ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்த நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ‘எங்களது ராஜினாமாவை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஏற்றுக்கொள்ளவேண்டும்’ என கூறினார்.

‘ஆட்சியை கவிழ்த்தவர்களுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்’ – நாராயணசாமி காட்டம்!!

மேலும் ‘ராஜினாமா குறித்து ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும். ஆட்சி கவிழ்ப்பிற்கு காரணமாக இருந்த எதிர்கட்சியினரை மக்கள் தண்டிப்பார்கள்’ என கூறினார். தொடர்ந்து புதுச்சேரி அரசை சேர்ந்த கொறடா அனந்தராமன் பேசிய போது, ‘எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆட்சியமைக்க கோரினால் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்வோம்’ என கூறியுள்ளார். இந்நிலையில் புதுச்சேரி அரசு கொடுத்த ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here