“பிக் பாஸ்” புகழ் ஷிவானியின் கலக்கல் கவர்ச்சி புகைப்படம் – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0

“பிக் பாஸ்” புகழ் ஷிவானி தற்போது மறுபடியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட ஆரம்பித்து விட்டார். இதனை அடுத்து தற்போது பல நாட்களுக்கு பிறகு தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஷிவானி நாராயணன்

சீரியல் மூலமாக பலரும் முன்னேறி வருகின்றனர். அவர்களை தினமும் மக்கள் பார்ப்பதால் சீரியல் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் அவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான், ஷிவானி நாராயணன்.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பகல் நிலவு” என்ற சீரியலில் அறிமுகமாகி தனது நடிப்பின் மூலமாக தனக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தினை உருவாக்கி கொண்டவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த சீரியலில் தனது எதார்த்தமான மற்றும் குறும்பான நடிப்பின் காரணமாக பிரபலமானார். அதே போல் இந்த சீரியலிற்கு பின்பும் பல சீரியல்களில் நடித்தார். இந்த பொது முடக்கத்தின் போது இன்னும் பிரபலமானார்.

சரியாக 4 மணிக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை தனது வழக்கமாக கொண்டிருந்தார். இதன் காரணமாக பலரும் இவருக்கு ரசிகர்களாக மாறினர். அதற்கு பின்பு தற்போது முடிந்த “பிக் பாஸ் 4” நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

அமமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் – சசிகலாவின் நிலைப்பாட்டினை அறிய தொண்டர்கள் ஆர்வம்!!

அந்த நிகழ்ச்சியில் இவர் தனக்காக வாதாடியதே கிடையாது. அதே போல் இவர் அங்கு சக போட்டியாளராக இருந்த பாலாஜியினை காதலித்தார். அவர் இவ்வாறாக செய்ததனை அந்த வீட்டில் இருந்த பலரும் கண்டித்தனர். ஆனால், இதனை ஷிவானி கண்டுகொள்ளவே இல்லை.

அதன் பிறகு ஒரு டாஸ்கில் அவரது அம்மா திட்டிய பிறகே போட்டியில் கவனத்தை செலுத்தினார். தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்ததும் மீண்டும் தனது புகைப்பட சேவையினை துவங்கிவிட்டார். இதனால் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. தற்போது பல நாட்களுக்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here