பெட்ரோல், டீசல், காஸ் விலை அதிகரிப்பு எதிரொலி – திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

0

தற்போது தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது இதனை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

திமுக:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அரசு தற்போது வீட்டில் சமையலுக்காக பயன்படுத்தும் காஸ் சிலிண்டரின் விலையை சுமார் ரூ.785 ஆக உயர்த்தியது. காஸ் சிலிண்டருக்கு ரூ.75 வரை உயர்த்தியுள்ளது. இதனால் வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதேபோல் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது 1 லிட்டர் பெட்ரோல் ரூ.92.59 ஆகவும் மற்றும் 1 லிட்டர் டீசல் ரூ.85.98 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வினால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும் தற்போது ஆளும் பாஜக மற்றும் அதிமுக அரசில் தான் எரிவாயுக்களின் விலை இந்த அளவிற்கு உச்சத்தை அடைந்துள்ளது. மேலும் இதன் விலையை குறைக்கவும், மீண்டும் விலை அதிகரிக்காமல் இருப்பதற்கும் அரசு முடிவெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கூறிவந்தனர்.

புதுச்சேரியில் கவிழ்ந்த காங்கிரஸ் ஆட்சி – முதல்வர் நாராயணசாமி ராஜினாமா!!

மேலும் இதுகுறித்து கடந்த 17ம் தேதி ஸ்டாலின் கூறியதாவது, இதனை எதிர்த்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் ஏற்பாட்டில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் துரைமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதேபோல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுகவினர் அதிகமாக குவிந்து தற்போது ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here